கட்டுரை வழிக்காட்டி

கட்டுரை பதிப்பின் பிரிவுகள்

I. ஆராய்ச்சி ஆவணங்கள் (சான்றாதார குறிப்புகள் தவிர்த்து 3000-8000 சொற்கள்)

இந்த பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கருப்பொருள் மற்றும் மற்றைய ஆராய்ச்சியாளர்களின் விமர்சனத்துடன் விரிவாக ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுரைகள், ஆராய்ச்சி செய்யப்படும் துறையில் தற்போதைய உள்ள நடைமுறையை ஆய்வு செய்ய வேண்டும். அத்துறையில் உள்ள ஏதேனும் ஒரு குறையினை அடையாளம் காண வேண்டும் மற்றும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளுடன் புதுமையான மறு மதிப்பீட்டை வழங்க வேண்டும். இந்த பிரிவில் தத்துவார்த்த கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

II. கட்டுரைகள் (சான்றாதார குறிப்புகள் தவிர்த்து 2000-3000 வார்த்தைகள்)

கட்டுரைகள் குறிப்பிட்ட தலைப்பில் உள்ள பிரச்சனைகளை அணுகி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பின் முழு உளக்காட்சியையும் விமர்சன கருத்துக்களையும் வழங்க வேண்டும். அவை தெளிவாக அடையாளம் காணக்கூடிய வாதங்களாக இருக்க வேண்டும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பில் உள்ள சிக்கலைக் கருத்தில் கொள்வதற்கான வெவ்வேறு வழிகளை வழங்க வேண்டும்.

III. வழக்கு அல்லது சட்ட விமர்சனம் (சான்றாதார குறிப்புகள் தவிர்த்து 1500-2000 வார்த்தைகள்)

இந்த பிரிவு நீதித்துறை தீர்ப்பு, சட்டமன்ற நடவடிக்கை அல்லது கொள்கை முன்மொழிவு ஆகியவற்றின் பகுப்பாய்விற்கானது. குறிப்பிட்ட வழக்கை கையாள்கையில் அதன் முதல் தொடக்கம் தொட்டு, தற்போழுது அந்த விடயத்தின் நிலை மற்றும் தாக்கம் குறித்து பகுப்பாய்வு செய்தல் வேண்டும். இதேபோல், ஒரு சட்டமன்ற கருத்து அல்லது கொள்கை முன்மொழிவு கேள்விக்குரிய சட்டமன்ற நடவடிக்கை / கொள்கை திட்டத்தின் பொருள் மற்றும் எதிர்பார்க்கப்படும் தாக்கத்தை அடையாளம் காண வேண்டும்.

IV. புத்தக விமர்சனம் (சான்றாதார குறிப்புகள் தவிர்த்து 1500-2000 வார்த்தைகள்)

இப்பிரிவானது ஒரு வழக்கறிஞரால் எழுதப்பட்ட சுயசரிதை, அல்லது சட்டம் சார்ந்து எழுதப்பட்ட அல்லது சட்டத்தை சார்ந்தவர்களினால் சட்டத்தை சார்ந்து எழுதப்பட்ட புத்தகத்தை பற்றிய பகுப்பாய்வு செய்வதாகும்.

கட்டுரை வழிக்காட்டி

சமர்ப்பிக்கும் வழிகாட்டுதல்கள்

I. பொது வழிமுறைகள்

ஆராய்ச்சி ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள் 300 சொற்களுக்கு மிகாமல் ஒரு சுருக்க கட்டுரையுடன் இருக்க வேண்டும்.
வழக்கு குறிப்புகள் மற்றும் சட்டமன்ற கருத்துகள் தவிர அனைத்து வகைகளுக்கும் ஒரே ஒரு இணை ஆசிரியர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், வழக்கு குறிப்புகள் மற்றும் சட்டமன்ற கருத்துகளில் இணை ஆசிரியர் அனுமதிக்கப்படுவதில்லை.
அனைத்து படைப்புகளும் அசல் மற்றும் வெளியிடப்படாததாக இருக்க வேண்டும், மேலும் வேறு எந்த பத்திரிகைக்கும் முன்பாக மதிப்பாய்வுக்கு நிலுவையில் இருக்க கூடாது. எவ்வகையான இருந்து கருத்து களவும் கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த படைப்பு இவ்விதழின் அனைத்து வித நிலைகளில் இருந்தும் தகுதி நீக்கம் செய்யப்படும்.
ஒவ்வொரு பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகள் சொல் வரம்புகளை கடைப்பிடிப்பது நல்லது என்றாலும், கட்டுரையின் தரத்தைப் பொறுத்து இவ்விதழின் ஆசிரியர் குழு திருப்பதி அடைந்தால், சொல் வரம்பு மாற்றி அமைக்கப்படும்.

II. கட்டுரை வரி வடிவம்

கட்டுரையின் அனைத்து பகுதிகளும் தமிழில் இருத்தல் கட்டாயம். தவிர்க்க இயலாத இடங்களில் மட்டும் ஆங்கிலம் உபயோக படுத்தலாம். ஆனால், ஆங்கிலம் கட்டுரையின் மொத்த வார்த்தைகளில் 3% தாண்ட கூடாது. சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளுக்கு தேவையான சமயங்களில் இதழின் ஆசிரியர் குழுவின் சார்பாக சில பரிந்துரைகளை படி மாற்றும் செய்யக் கோரி கட்டுரை திருப்பி அனுப்படும்.
அனைத்து வித கட்டுரைகளுகளும், கட்டுரையின் தலைப்பு, ஆசிரியர்களின் பெயர் மற்றும் அவர்கள் சார்ந்த கல்வி நிலையம் அல்லது நிறுவங்கள் பற்றிய குறிப்பு இருத்தல் வேண்டும்.
கட்டுரையின் முக்கிய கருத்து பகுதி மீரா இனிமை (Meera Inimai) என்ற எழுத்துருவில் இருத்தல் வேண்டும். ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டால் தமிழில் உள்ள எந்த எழுத்துருவில் வேண்டுமானாலும் கட்டுரையை சமர்ப்பிக்கலாம். எழுத்துரு அளவு 12, 1.5 வரி இடைவெளியுடன் இருக்க வேண்டும்.
அடிக்குறிப்புகள் அல்லது சான்றாவன பின் குறிப்புகள் மேற்கண்ட எழுத்துருவில் எழுத்துரு அளவு 10, ஒற்றை வரி இடைவெளியுடன் இருத்தல் வேண்டும்.
அனைத்து தலைப்புகளிலும் ஒரே மாதிரியான வரி வடிவமைப்பு இருக்க வேண்டும்.
உரைகள் மற்றும் அடிக்குறிப்புகள் புளூபுக் 20 வது பதிப்பிற்கு உட்பட்டு வேண்டும்.

தலைப்பு வரி வடிவங்கள்:

கட்டுரையில் உள்ள ஒவ்வொரு தலைப்பையும் எண்ணில் குறியீட்டு இருக்க வேண்டும். முக்கிய தலைப்புகள் அல்லது முதல் நிலை தலைப்புகள் I, II, III என்ற வரிசையிலும், இரண்டாம் நிலை தலைப்புகள் 1. 2. 3. என்ற வரிசையிலும், மூன்றாம் நிலை தலைப்புகள் அ. ஆ. இ. என்ற வரிசையிலும், நான்காவது நிலை தலைப்புகள் (i), (ii), (iii) என்ற வரிசையிலும் குறிப்பிட்டிருக்க வேண்டும். இதற்கு மேற்பட்ட தலைப்புகளை தவிர்த்தல் ஆசிரியர் குழு வழிகாட்டிகள்

கட்டுரை வழிக்காட்டி

ஆசிரியர் குழு வழிகாட்டிகள்

இந்திய சட்ட ஆய்வு இதழ், கட்டுரை மதிப்பாய்வை மேற்கொள்ள மூன்று கட்ட இரட்டை-மறைவு மதிப்பீட்டு செயல்முறையைப் பயன்படுத்துகிறது. மதிப்பாய்வின் மூன்று கட்டங்கள், நேரத்தை எடுத்துக்கொண்டாலும், வெளியீட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் உள்ளடக்கத்தைப் பற்றிய முழுமையான மதிப்பாய்வை உறுதி செய்கின்றன.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக, எங்கள் வலைத்தளத்தில் மறுஆய்வு செயல்முறையின் ஒவ்வொரு கட்டமும் வெற்றிகரமாக முடிந்தபின், ஆசிரியர் (களை) அறிவிக்கப்படும்.
கட்டுரையை சமர்ப்பித்த பிறகு ஆசிரியர் குழுவை கட்டுரை சம்பந்தமாக எவ்வாறும் அணுகுதல் கூடாது. அவ்வாறு அணுகும் ஆசிரியரின் கட்டுரைகள் மதிப்பீட்டில் இருந்து நிராகரிக்கப்படும். கட்டுரையை சமர்ப்பித்த பின்னரே கையெழுத்துப் பிரதியை ஏற்பது அல்லது நிராகரிப்பது தொடர்பான முடிவானது மேற்கொள்ளப்படும்.
வரிவடிவம் அல்லது கருத்து தொகுப்பு தொடர்பான பரிந்துரைகளுடன் கட்டுரைகளை ஆசிரியருக்கு (களுக்கு) திருப்பித் தரப்படலாம். வெளியீட்டுக்காக ஒரு கட்டுரையை இறுதியாக ஏற்றுக்கொள்வது என்பதில் ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியாகும்.
கட்டுரையில் ஆசிரியர் (கள்) மேற்கோள் காட்டியுள்ள ஆதாரங்களின் நகல்களைக் கோருவதற்கான உரிமையை ஆசிரியர் குழு கொண்டுள்ளது.
சமர்ப்பிப்புகளை ஏற்றுக்கொள்வது அல்லது நிராகரிப்பது தொடர்பாக ஆசிரியர் குழு முழுமையான விருப்பத்தை வைத்திருக்கிறது.நல்லது.

பதிப்பு கட்டணம்

கட்டுரையின் எந்த நிலையிலும் எந்த கட்டணமும் கோரப்படாது.

SUBMIT YOUR MANUSCRIPT NOW