P. Jothipraba, Government Law College, Tiruchirappalli

CURRENT STATUS OF NATURAL JUSTICE THEORY IN INDIA

Best Citation – P. Jothipraba, Current Status of Natural Justice Theory In India, 1 ILRJ & 21 (2021)

Abstract

Although the concept of natural justice is not directly provided in the Constitution of India, it is considered by legal experts as an essential tool for the administration of justice in India. Natural justice is a concept of constitutional law. Natural justice in its language is a natural sense of right and wrong and in its legal linguistics it is synonymous with justice honesty. Natural justice has a very wide application at the discretion of the administration. It aims to prevent the injustice done to citizens by arbitrary authority by the action of the executive authorities. In its early days, the concept of natural justice was limited to judicial action. But with the advent of the People’s Welfare State the powers of the executive increased considerably. The result has been changed to allow the court to adjudicate any disputes or quasi-judicial proceedings in the light of natural justice, as the law cannot determine the fair procedure to be followed by each officer. Therefore, the theory of natural justice has come up with a solution by establishing a rule that the courts must follow when exercising their powers and performing their functions.

KEYWORDS: Natural Justice, Common Law, Constitution, The State, Court.

Download Full Paper

பொ. ஜோதிபிரபா, அரசு சட்ட கல்லூரி, திருச்சிராப்பள்ளி

இந்தியாவில் இயற்கை நீதி கோட்ப்பாட்டின் தற்பொழுதை நிலை: ஓர் பகுப்பாய்வு

இயற்கை நீதி மற்றும் அதன் கொள்கைகள்:

இயற்கை நீதி பற்றிய கருத்து இந்திய அரசியலமைப்பில் நேரடியாக வழங்கப்படவில்லை என்றாலும், அது இந்தியாவின் நீதி நிர்வாகத்திற்கு தேவையான கருவி என்று சட்ட வல்லுநர்களால் கருதப்படுகிறது. இயற்கை நீதி என்பது அரசியலமைப்பு சட்டத்தின் ஒரு கருத்தாகும். அதன் மொழியில் இயற்கை நீதி என்பது சரியானது மற்றும் தவறானது என்பதற்கான இயல்பான உணர்வு மற்றும் அதன் சட்டப் பூர்வ மொழியியலில் இது நீதி நேர்மைக்கு ஒத்ததாகும்[1]. இயற்கை நீதி என்பது நிர்வாக விருப்பப்படி மிகவும் பரந்த பயன்பாட்டைக் கொண்டுள்ளது. நிர்வாக அதிகாரிகளின் செயலால் குடிமக்களுக்கு தன்னிச்சை அதிகாரத்துடன் இழைக்கப்படும் அநீதியை தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் ஆரம்பத்தில், இயற்கை நீதி என்ற கருத்து நீதித்துறை நடவடிக்கைக்கு மட்டுமே இருந்தது. ஆனால் மக்கள் நல அரசின் வருகையுடன் நிர்வாக அதிகாரிகளின் அதிகாரங்கள் கணிசமாக அதிகரித்து. இதன் விளைவாக ஒவ்வொரு அதிகாரிகளும் பின்பற்ற வேண்டிய நியாயமான நடைமுறையை சட்டத்தால் தீர்மானிக்க இயலாது என்றிருந்ததை எந்தவொரு சச்சரவுகளையும் அல்லது அரை-நீதித்துறை நடவடிக்கைகளையும் நீதிமன்றம் இயற்கை நீதியை கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்கலாம் என மாற்றப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்துகையில் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைச் செய்யும் போது நிர்வாக அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய ஒரு விதிமுறையை நிறுவுவதன் மூலம் ஒரு தீர்வைக் இயற்கை நீதி கோட்பாடு கொண்டு வந்துள்ளது. நிர்வாக அதிகாரிகள் ஒரு சட்ட நிறைவேற்றுபவராக இருப்பதால் மக்களுக்கு நன்மைகளை வழங்க வேண்டும், ஆனால் அத்தகைய குறிக்கோள் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் மீது பயனுள்ள கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதனை கருத்தில் கொண்டே இயற்கை நீதி கோட்பாடு உருவாக்கப் பட்டது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுப்பதற்கும் அவற்றின் வரம்புகளைச் சரி பார்ப்பதற்கும், நீதிமன்றம் அநீதிக்கு எதிரான முக்கியமான பாதுகாப்புகளாக இயற்கை நீதியின் கொள்கைகளை உருவாக்கியுள்ளது. இயற்கை நீதியின் நோக்கம் குடிமக்களுக்கு நீதியைப் பாதுகாப்பதும் நீதியை அவமதிப்பதைத் தடுப்பதும் ஆகும். இயற்கை நீதியை மீறும் சட்டங்கள் இல்லாநிலையானதாகும்.

Download Full Paper