Dharshini P, Government Law College, Tiruchirappalli
A STUDY ON ADVERTISING RESTRICTIONS IN THE LEGAL PROFESSION IN INDIA
Best Citation – Dharshini P, A Study On Advertising Restrictions In The Legal Profession In India, 1 ILRJ & 13 (2021)
Abstract
In India, Advocates are prohibited from advertising their professional services under the rules recommended by the Bar Council. This law is derived from old Victorian ideas of British public law. It does not consider the legal profession as a business. Moreover, he considered the lawyers to be the best appointees of the court. The origins of this concept can also be found in the U.S. Department of Justice. According to Article 27 of the American Bar Association’s Professional Code of Conduct, soliciting a lawyer’s services is ‘lawyer-based’. Considering legal practice to be a ‘classic profession’ rather than services led to the development of such regulation. This policy is still in use today, not only to allow lawyers to advertise and mislead the public, but also to ‘discredit’ the dignified profession. However, over time this view has often been criticized by senior lawyers and junior lawyers. This provision is subject to legal provisions such as creating barriers for new lawyers and amassing market power with a handful of ‘highly reputed’ lawyers to charge higher fees from his client. However, despite these altered views and debates in India, Indian law lawyers are still barred from advertising their legal services.
KEYWORDS – Advocate, Advertising, Bar Association, Law, Court
ப. தர்ஷினி, அரசு சட்ட கல்லூரி, திருச்சிராப்பள்ளி
இந்தியாவில் வழக்கறிஞர் தொழிலில் விளம்பர கட்டுப்பாடுகள் குறித்த ஆய்வு
அறிமுகம்
இந்தியாவில், வழக்குரைஞர்கள் தங்கள் தொழில்முறை சேவைகளை, பார் கவுன்சில் பரிந்துரைத்த விதிகளின் கீழ் விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் பிரிட்டிஷ் பொதுச் சட்டத்தின் பழைய விக்டோரியன் கருத்துக்களிலிருந்து பெறப்பட்டது. இது சட்டத் தொழிலை ஒரு வர்த்தகமாகக் கருதவில்லை. மேலும், வழக்கறிஞர்களை நீதிமன்றத்தின் மிகச்சிறந்த நியமனலாளர்களாகக் கருதினார். இக்கருத்தின் தோற்றத்தை அமெரிக்க நீதித்துறை நியதிகளிலும் காணலாம். அமெரிக்க பார் அசோசியேஷனின் தொழில்முறை நெறிமுறைகளின் கட்டளை 27 இன் படி, ஒரு வழக்கறிஞரின் சேவைகளை கோருவது ‘வழக்கறிஞரின் தொழில் சார்ந்ததாக’ இருக்கும். சேவைகளை விட சட்ட நடைமுறையை ஒரு ‘உன்னதமான தொழில்’ என்று கருதுவது அத்தகைய கட்டுப்பாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. வழக்கறிஞர்களை விளம்பரம் செய்ய அனுமதிப்பது பொதுமக்களை தவறாக வழிநடத்த வழிவகுக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், கவுரவமான தொழிலின் ‘கண்ணியத்தை இழிவுபடுத்தும்’ என்பதன் காரணமாகவும் இக்கொள்கை வழக்கத்தில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. எவ்வாறாயினும், காலப்போக்கில் இந்த பார்வை பெரும்பாலும் மூத்த வழக்குரைஞர்களாலும், இளைய வழக்குரைஞர்களாலும் விமர்சிக்கப்படுகிறது[i]. புதிய வழக்குரைஞர்களுக்கான தடைகளை உருவாக்குதல் மற்றும் தனது கட்சிகாரரிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்க ‘உயர் புகழ்பெற்ற’ ஒரு சில வழக்கறிஞர்களுடன் சந்தை அதிகாரத்தை குவித்தல் போன்ற சட்ட விதிப்பிழைகளுக்கு இவ்விதி உள்ளாகிறது. எவ்வாறாயினும், இந்த மாற்றப்பட்ட கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் இந்தியாவில் நிலவினாலும் இந்திய சட்டம் வழக்குரைஞர்கள் தாங்கள் செய்யும் வழக்குரைஞர் சேவையை விளம்பரப்படுத்த தடை இன்று வரை உள்ளது.