கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
                                –   திருவள்ளுவர் (குறள் 772)


வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறி தப்பினாலும் கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது.

இந்திய சட்ட ஆய்வு இதழ்

இந்திய சட்ட ஆய்வு இதழ் [Indian Legal Research Journal – ILRJ] நீதி துறையில் தமிழ் மொழி வளர்ச்சி பெற்று வரும் நிலையில் தமிழில் சட்ட புலன்களை பெருக்கும் நோக்கோடு இந்த ஆய்வு இதழ் தொடங்கப்பட்டது. சட்ட துறையின் அனைத்து கிளைகளும் குறிப்பிடத்தகுந்த நல்ல மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிகோளோடு இயங்கும் இதழாகும். பிரிட்டிஷ் நூலகத்தின் அங்கீகாரத்தையும் [ISNI – 5031-1356-9] சர்வதேச தரநிலை அங்கீகார எண்ணையும் [ISSN – 2583-0600] பெற்ற முதல் தமிழ் இதழ் என்ற பெருமை நம் இதழையேச் சாரும்.

இது ஆண்டுக்கு இரண்டு முறை இணையத்தளத்தில் வெளியிடப்படும். இவ்விதழ் கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், புத்தக மதிப்புரைகள், வழக்கு கருத்துகள், ஆராய்ச்சி ஆவணங்கள், வெளியிடுவதற்கான ஒரு ஊடாடும் தளத்தை நிறுவ விரும்புகிறது. இவ்விதழ் சட்ட ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான பார்வையுடனும், தலையங்கக் குழுவுடன் சட்ட துறையில் சிறப்பான பங்களிப்பை கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய சட்ட ஆய்வு இதழ், சட்டத்தின் அனைத்து கிளைகளில் இருந்தும் வேறு எந்த இதழ்களிலும் வெளியிடப்படாத, கருத்து களவு அல்லாத சுய படைப்புகளை வரவேற்கிறது.

SUBMIT YOUR MANUSCRIPT NOW

Subscribe

Sign up to our newsletter and stay up to date

Subscribed!

Thank you for subscribing to our newsletter.